3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடியில் சேர கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது!. நீதிமன்றம் அதிரடி!

Ennum Ezhuthum
0
3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடியில் சேர கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது!. நீதிமன்றம் அதிரடி!

 

3 வயதுகுட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி பள்ளிகளில் சேர கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2023-24ம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைகான குறைந்தபட்ச வயது வரம்பை 6 ஆக நிர்ணயித்து அண்மையில் குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் சில குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி பெறும் உரிமை சட்டம் 2012ன் விதி 8ன் படி, ஜூன் 1ம் தேதி 3 வயதை நிறைவு செய்யாத குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்க்க அனுமதியில்லை. இந்த விதியை மீறியிருக்கும் நிலையில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு தொடர்பாக மாநில அரசு கொண்டுவந்துள்ள நடைமுறையில் எந்தவித நிவாரணத்தையும் பெற்றோர்கள் கோர முடியாது.

மேலும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர கட்டாயப்படுத்துவதன் மூலம் சட்டவிரோத செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் கல்விப்பெறும் சட்டப்பிரிவு 2(சி)ன் படி, 6 வயதை நிறைவு செய்த குழந்தைகள் மட்டுமே இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமையின் கீழ் அருகில் உள்ள பள்ளிகளில் தொடக்கக் கல்வியில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுகின்றனர் என்று கூறியது.மேலும் 6 வயதை நிறைவு செய்த குழந்தைக்கு பள்ளியில் கல்வி மறுக்க முடியாது என்பதையும் இந்த சட்டம் தெளிவுப்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்

Post a Comment

0Comments

Post a Comment (0)