அவிழும் "மர்மம்.!" 43,000 பழமையான மம்மி.. எகிப்து பிரமிடுகளில் புதைந்து கிடக்கும் ரகசியம்!
எகிப்து: பல நூறு ஆண்டுகளாக நமக்கு மர்மமாகவே இருக்கும் எகிப்து பிரமிடுகள் குறித்த மர்மம் விலக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் இப்படி திடீரென சொல்ல என்ன காரணம்.. என்ன நடந்தது.. வாங்கப் பார்க்கலாம்.
ஆப்பிரிக்கா பல வளங்களைக் கொண்ட ஒரு கண்டமாக இருந்தாலும் இன்னும் அங்குள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. சில நாடுகள் மட்டும் விதிவிலக்காகக் கொஞ்சம் பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ளது.
அப்படி வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் முக்கியமானது எகிப்து. உலக அளவில் மிகவும் பழமையான நாடுகளில் ஒன்றாகவும் எகிப்து இருக்கிறது.
எகிப்து
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரிகம் தான் பண்டைய எகிப்து நாகரிகமாகும். எகிப்திய நைல் பள்ளத்தாக்கில் அருகே இந்த நகாரீகம் இருந்தது. கிபி காலகட்டத்திலேயே செழிப்பாக இருந்த நாகரீகங்களில் ஒன்றாக பண்டைய எகிப்து இருந்தது. பல அதிசயங்களைப் புதைத்து வைத்திருக்கும் எகிப்து இப்போதும் கூட சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் அதிகம் ஆய்வு செய்யும் இடங்களில் ஒன்றாகவே உள்ளது.
பிரமிடுகள்
நம்மில் பலருக்கும் எகிப்து என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் பிரம்மாண்ட பிரமிடுகள் தான். உலக அதிசயங்களில் ஒன்றான இந்த பிரமிடுகளில் பல பண்டைய எகிப்து மன்னர்களில் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்து நாகரிகத்தில் மரணத்திற்கு பின்பும் ஒரு வாழ்க்கை உள்ளதாக நம்பப்பட்டது. இதனால் உயிரிழக்கும் மன்னர்களுக்குத் தேவையான உடைகள், நகைகள், உணவுகள் என எல்லாம் சேர்ந்து இந்த பிரமிடுகளில் வைக்கப்படும்.
மம்மி
இதில் வைக்கப்படும் உடல்கள் பல காலமானாலும் சேதமடையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பாக வைக்கப்படும். அப்படி வைக்கப்படும் உடல்கள் மம்மி என்று அழைக்கப்படும். இந்த பிரமிடுகளில் பல ரகசியங்கள் புதைந்து உள்ளன. அது குறித்துத் தெரிந்து கொள்ளத் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி எகிப்தின் கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸ் என்ற பகுதியில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உட்பட முக்கிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
4,300 ஆண்டுகள் பழமை
எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மற்றும் முழுமையான மம்மி இதுதான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தங்கத் தகடுகளால் இந்த மம்மி மூடப்பட்டு இருந்ததாகவும் 4,300 ஆண்டுகள் பழமையான இந்த மம்மி ஒரு பெரிய சுண்ணாம்புக் கற்சிலைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. பண்டைய எகிப்தியர்கள் அதை 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்போது எங்கு விட்டுச் சென்றார்களோ அதே இடத்தில் அப்படியே இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போது
இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அங்குப் பெரிய புதைகுழியில் மொத்தம் நான்கு கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஐந்தாவது மற்றும் ஆறாவது சாம்ராஜ்யங்களுக்கு முந்தயவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது கிமு 25 முதல் 22ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும். ஐந்தாவது வம்சத்தின் கடைசி மன்னரான உனாஸின் பிரமிடு வளாகத்தில் இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு இந்த கல்லறை அலங்கரிக்கப்பட்டது.
யார் யார்
இதில் வேறு சில கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ராஜ வம்ச ரகசியத்தைப் பாதுகாக்கும் "சீக்ரெட் கீப்பர்" என்பவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கல்லறை ஒரு பாதிரியாருக்குச் சொந்தமானது.. நான்காவது கல்லறை அக்காலத்தில் வாழ்ந்த நீதி அரசருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப் பழைய கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.
அவிழும் மர்மம்
இப்போது கண்டறியப்பட்டுள்ள 4,300 ஆண்டுகள் பழமையான இந்த மம்மி மூலம் அப்போது இருந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் அங்குப் புதைந்திருக்கும் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரவும் வாய்ப்புகள் அதிகம். எகிப்து நாட்டிற்குச் சுற்றுலாத் துறை தான் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சுற்றுலாத் துறை கடுமையாகச் சீரழிந்து வருகிறது. இந்தச் சூழலில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மீண்டும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.