நீர்
1. கலைத்திட்ட எதிர்பார்ப்புகள் :
நீர் - நீரின் தன்மை - முக்கியத்துவம் - பயன்பாடுகளை அறிதல்.
2. கற்பித்தலின் நோக்கங்கள் :
நீரின் மூலங்கள் மற்றும் பயன்பாட்டிற்குக் கிடைக்கக்கூடிய நீரினைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுதல்.
நீரின் இயையு பற்றியும், நீர் சுழற்சி பற்றியும் புரிந்து கொள்ளுதல்.
நீரினை சேமிக்கும் வழிகளைப் பரிந்துரைக்கும் திறன்களைப் பெறுதல்.
புவியில் உயிர்வாழத் தேவையான நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல்.
நீரை சேமிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
3.ஆயத்தப்படுத்துதல் :
சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்:
நீர் குடிக்காமல் நீ வாழ முடியுமா ?
நீரில்லாமல் உன் அன்னை சமைக்க முடியுமா?
நீரில்லாமல் பயிர்கள் விளையுமா?
எப்போதெல்லாம் உனக்கு நீர் தேவைப்படுகிறது?
இது போன்ற வினாக்களைக் கேட்டு ஆயத்தம் செய்தல் வேண்டும்.
4. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்:
மின்னட்டைகள், பொருத்தட்டைகள்.
5.வாசித்தல்:
ஆசிரியர் பாடம் முழுவதையும் ஒருமுறை வாசித்தல். பின்பு பத்தி வாரியாக மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல்.
6. கருத்து வரைப்படம் :
7.தொகுத்தல்
___________________________________________________________________________________
வ .எண் பாடப்பொருள் தொடர்புடைய தகவல்கள்
___________________________________________________________________________________
1. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களும்,தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாத பகுப்பாக உள்ளது நீராகும்.
___________________________________________________________________________________
2. உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97% நீர் கடல்கள் மற்றும் பெருங்கடல்களிலேயே உள்ளது.
___________________________________________________________________________________
3. உலகம் முழுவதிலும் 3% நன்னீரே உள்ளது. அதுவும் பனிப்படிவுகளிலும், பனிப் பாறைகளிலும் உறைந்துள்ளது.
___________________________________________________________________________________
4. ஏரிகள், ஆறுகள், குட்டைகள் ஆகிய அனைத்திலுமாக 0.3% நீர் மட்டுமே மேற்பரப்பு நீராக உள்ளது.
___________________________________________________________________________________
8.பரிந்துரைக்கப்படும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் :
விரிவுரை முறை :
ஆசிரியர் மாணவர்களுக்கு நீரின் மூலங்கள், புவியில் நீரின் பரவல், நீரின் இயைபு, நீர் சுழற்சி, இயற்கை நன்னீர் ஆதாரங்கள், நிலத்தடி நீர், நீர்பாதுகாப்பு, நீர் மேலான்மை, மழைநீர் சேகரிப்பு, நீரின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்குதல்.
மாணவர் செயல்பாடு :
மாணவர்கள் நீரின் பயன்பாடு குறித்து கருத்து வரைபடம் வரைதல்.
குழுச்செயல்பாடு :
மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு நீரின் மூன்றாவது குழு நீர் பாதுகாப்பு முறைகள் பற்றியும் குழு விவாதம் செய்தல்.
9. சிந்தனையைத் தூண்டும் செயல்பாடுகள்:
மழைநீர் சேகரிப்பு குறித்த மாதிரிகள் செய்து வருதல்.
10.வலுவூட்டுதல்:
கொடுக்கப்பட்ட பாடப்பகுதியை சூழலோடு கலந்துரையாடி குழு விவாதம் செய்தல்.
11. மதிப்பீடு :
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
நகரங்களிலும், கிராமங்களிலும் தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
'மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
12. குறைதீர் கற்பித்தல் :
மையக்கருத்தின் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
13. தொடர் செயல்பாடு :
லவாய்சியரின் வேதியியல் புரட்சி பற்றி கட்டுரை எழுதிவருதல்.
14. கற்றலின் விளைவுகள் :
மாணவர்கள் நீரின் மூலங்கள், இயைபு, நீர் சுழற்சி, நீர் சேமிப்பு வழிகள், நீரின் முக்கியத்துவம் ஆகியவற்றை கற்றுக் கொண்டனர்.