1. பின்னங்கள்
கலைத்திட்ட எதிர்பார்ப்புகள் :
வேற்றினப் பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்
தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாகக் குறிப்பிடுதல் மற்றும் அவற்றின் நேர்மாறு.
தகா பின்னங்கள் மற்றும் கலப்பு பின்னங்களைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.
கலப்பு பின்னங்களில் நான்கு அடிப்படைச் செயல்களைச் செய்தல்.
3.ஆயத்தப்படுத்துதல்:
சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் :
ஒரு கடலை மிட்டாயை உன் அம்மா உனக்கும் உன் தங்கைக்கும் எவ்வாறு பங்கிட்டுக் கொடுப்பார்?
ஆளுக்குப் பாதி
பாதி என்றால் எவ்வளவு? 1/2
பாதியில் பாதி என்றால் எவ்வளவு? 1/4
இவ்வாறாக மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் வேண்டும்.
4. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்:
மின்னட்டைகள், பொருத்தட்டைகள்.
5.வாசித்தல்:
ஆசிரியர் பாடம் முழுவதையும் ஒருமுறை வாசித்தல். பின்பு பத்தி வாரியாக மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல்.
6. கருத்து வரைபடம் :
___________________________________________________________________________________
வ . எண் பாடப் பொருள் குறித்த முக்கியத் தகவல்கள் ___________________________________________________________________________________
1. பின்னம் என்பது முழுப்பொருளின் பகுதியாகும். முழுப்- பொருளானது ஒன்றாகவோ அல்லது குழுக்களாகவோ இருக்கும்.
___________________________________________________________________________________
2. கொடுக்கப்பட்ட பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை ஒரே எண்ணால் பெருக்கினால் சமான பின்னங்கள் கிடைக்கும்.
___________________________________________________________________________________
3. வேற்றின பின்னங்களை ஓரின பின்னங்களாக மாற்றிய பிறகுதான் கூட்டவோ அல்லது கழிக்கவோ முடியும்.
___________________________________________________________________________________
4. முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் கலப்பு பின்னம்ஆகும்.
__________________________________________________________________________________
இரண்டு பின்னங்களின் பெருக்கற்பலன் = இரண்டுபின்னங்களின்
........................................................................
தொகுதிகளின் பெருக்கற்பலன்
___________________________________________________________________________________
5. ஓர் எண்ணை, ஒரு பின்னத்தால் வகுப்பது அந்த எண்ணைஅப்பின்னத்தின் தலைகீழியால் பெருக்குவதற்குச் சமம்.
__________________________________________________________________________________
கரும்பலகை பயன்பாட்டு முறை :
ஆசிரியர் மாணவர்களுக்கு தகுபின்னம், தகாப்பின்னம், கலப்பு பின்னம், சமான பின்னங்கள், ஓரினப் பின்னங்கள், வேறினப்பின்னங்கள், வேற்றினப் பின்னங்களின் கூட்டல் கழித்தல், கலப்புப் பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல், பின்னங்களின் பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றை தகுந்த எடுத்துக் காட்டுகளுடன் கரும்பலகையில் விளக்குதல்.
தானே கற்றல் முறை :
மாணவர்கள் எடுத்துக் காட்டுகளை தாமே செய்து காண்பித்தல்.
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, வெவ்வேறு வகைப்பின்னங்களின் தன்மைகளையும் அவற்றின் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்களை செய்து காண்பித்தல்.
9. சிந்தனையைத் தூண்டும் செயல்பாடு:
மாணவர்கள் காகிதங்களை மடித்து வெவ்வேறு பின்னங்களைக் காண்பித்தல்.
10. வலுவூட்டுதல் :
மாணவர்களுக்கு கடினமான பகுதிகளைக் கண்டறிந்து, மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
11. மதிப்பீடு செய்தல் :
1. 7 3/4 + 6 1/2 = ........................
2. நிலவன் ஒரு மணி நேரத்தில் 4 1/2 கி.மீ நடக்க முடியுமென்றால் அவர் 31/2 - மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடப்பார்?
3. மாடிப்படிகளின் மொத்த நீளம் 5 1/2 மீ. அவற்றில் ஒவ்வொரு படியும் 1/4மீ உயரத்தில் அமைக்கப்பட்டால் அந்தப் படிக்கட்டில் எத்தனை படிகள் இருக்கும்.
மாணவர்களுக்கு கற்றலில் புரிதல் திறன் குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து மீத்திறன் மிக்க மாணவர்களைக் கொண்டு மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
13. தொடர் செயல்பாடு :
மாணவர்கள் பயிற்சிக் கணக்குகளை வீட்டுப்பாடமாக செய்து வருதல்.
14. கற்றலின் விளைவுகள் :
மாணவர்கள் பின்னங்களின் வகைகளையும் அவற்றின் அடிப்படை கணிதச் செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டனர்.