வேலுநாச்சியார்
1. கலைத்திட்ட எதிர்பார்ப்புகள் :
வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி அறிதல்.
2. கற்பித்தலின் நோக்கங்கள் :
விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்.
3. ஆயத்தப்படுத்துதல்:
சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் :
உன்னிடம் அதிக அன்பு கொண்டவர் யார்?
உன் சகோதரியை நீ நேசிக்கிறாயா?
நீ வீரச்சிறுவனா/ சிறுமியா?
நீ வீரச்சிறுவனா/ சிறுமியா?
வீரத்தமிழர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?
இவ்விதமாக ஆயத்தப்படுத்துதல் வேண்டும்.
நினைவு கூர்தல் :
நினைவு கூர்தல் :
வீரமங்கை ஜான்சிராணியை நினைவு கூர்தல்.
4. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்:
மின்னட்டைகள், பொருத்தட்டைகள்
5.வாசித்தல்:
ஆசிரியர் பாடம் முழுவதையும் ஒருமுறை வாசித்தல். பின்பு பத்தி வாரியாக மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல்.
6. கருத்து வரைபடம் :
7. தொகுத்தல் :
___________________________________________________________________________________
வ.எண் பாடப்பொருள் குறித்த தகவல்கள்
___________________________________________________________________________________
1 இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.
___________________________________________________________________________________
2 சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
___________________________________________________________________________________
3 காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.
___________________________________________________________________________________
4 திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
___________________________________________________________________________________
5 "என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார் கோவில். எனவே முதலில் காளையார் கோவிலைக் கைப்பற்றுவோம், பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார் வேலுநாச்சியார். அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
___________________________________________________________________________________
6 வரும் விசயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம் என்றார்
வேலுநாச்சியார்.
___________________________________________________________________________________
8.பரிந்துரைக்கப்படும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் :
ஆசிரியர் செயல்பாடு:
ஆசிரியர் மாணவர்களுக்கு வேலுநாச்சியாரின் தந்தை, கணவர், திண்டுக்கல் கோட்டை ஆலோசனைக் கூட்டம், ஹைதர்அலியின் உதவி, மருதுசகோதரர்களின் துணை, உடையாள், குயிலி ஆகியவர்களின் தியாகம் இறுதியில் வெற்றி ஆகியவற்றை கதை கூறும் முறையில் கூறுதல்.
நடித்துக்காட்டல் முறை :
பெண்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ முடியும் என்பதற்கு வேலு நாச்சியாரின் சாதனைகளை தன்வரலாறு கூறுதல் முறையில் நடித்துக்காட்டச் சொல்லுதல்.
குழுக்கற்றல் முறை :
மாணவர்கள் குழுவாக கதையில் வரும் வேலு நாச்சியார், உடையாள், குயிலி பாத்திரங்களுக்கு ஒவ்வொருவராக தேர்ந்தெடுத்து, நாடகமாக நடத்திக்காட்டுதல்.
9.சிந்தனையைத் தூண்டும் செயல்பாடுகள்:
மாணவர்கள் ஜோன்ஆப்ஆர்க் போன்ற வீரப்பெண்மணிகளின் கதைகளை வாசித்தல்.
10.வலுவூட்டுதல்:
கொடுக்கப்பட்ட பாடப்பகுதியை சூழலோடு கலந்துரையாடி குழு விவாதம் செய்தல்.
11. மதிப்பீடு :
1. வேலுநாச்சியாருக்கு படை உதவி செய்தவர் யார்?
2. வேலுநாச்சியாருக்கு துணையாக இருந்த சிவகங்கை மன்னர்கள் யாவர்?
3. வேலுநாச்சியாரை காட்டிக் கொடுக்க மறுத்த பெண் யார்?
4. ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழித்த வீரப் பெண்மணி யார்?
இது போன்ற வினாக்களை கேட்டு மதிப்பீடு செய்தல் வேண்டும்.
12. குறைதீர் கற்பித்தல்:
மையக் கருத்தின் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பித்தல்.
13. தொடர் செயல்பாடு:
மாணவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு பெண்களின் புகைப்படங்களைச் சேகரித்து படத்தொகுப்பு தயார் செய்தல்.
14. கற்றலின் விளைவுகள் :
மாணவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றியும், அவர் சிவகங்கையை மீட்ட கதையையும் அறிந்து கொண்டனர்.