டெலிபோன் உருவான கதை..!

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner




  • ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் 1847-ம் ஆண்டில் பிறந்தார் கிரகாம் பெல்
  • 1871-ம் ஆண்டு இங்கிலாந்தின் பாஸ்டன் நகருக்கு குடியேறி ஒலி பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார் பெல்.
  •  
  • 'டிரிங்'... 'டிரிங்'... என்ற அந்தக் காலத்து டெலிபோன் மணி ஓசையை நினைவிருக்கிறதா? அந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் பெயரும் பெல்தான்... அலெக்சாண்டர் கிரகாம் பெல்..! அவரை பற்றியும், அவரது கண்டுபிடிப்பு பற்றியும் தெரிந்து கொள்வோமா... ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் 1847-ம் ஆண்டில் பிறந்தார் கிரகாம் பெல். சிறு வயதிலேயே கவிதை எழுதுவதிலும், பியானோ வாசித்தல், மிமிக்ரி போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார் பெல்.அவருடைய 12 வயதில் அவர் தாயார் கேட்கும் திறனை இழக்கத் தொடங்கினார். 
  •  
  • எனவே, அவருக்காக செய்கை பேச்சுப் பயிற்சியை கற்றுக் கொண்டார் பெல். பெல்லின் தந்தை, அவர் அண்ணன் என எல்லோருமே காது கேளாதோருக்கான பயிற்சிகளிலும், சேவையிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெல்லுக்கு குரல் ஒலிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது.  1871-ம் ஆண்டு இங்கிலாந்தின் பாஸ்டன் நகருக்கு குடியேறி ஒலி பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார் பெல். 1876-ம் ஆண்டில் ஒரு நாள்...
  •  
  •  கண்ணாடி அறையான தன் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் பெல் பேசிய பேச்சு வெளியே கேட்டதாக அனைவரும் சொன்னார்கள். ஒலியை மின் குறியீடுகளாக்கி வயர்கள் வழியே கடத்தும் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியே முதல் தொலைபேசியை வடிவமைத்தார் கிரகாம் பெல். இந்தப் புதிய கண்டுபிடிப்பு உல கின் கவனத்தை ஈர்த்தாலும், அன்றைய பெரும் நிறுவனங்கள் எல்லாம் இந்தத் தொழில்நுட்பத்தை காசு கொடுத்து வாங்க பயந்தன. 
  •  
  • இதனால் கிரகாம்பெல் 1877-ம் ஆண்டு 'அமெரிக்கன் டெலிபோன்' எனும் சொந்த நிறுவனத்தை அமெரிக்காவில் தொடங்கினார். அந்நிறுவனம் வருமானத்தை வாரிக் குவித்தது. ஒரே கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரானாலும் தன் ஆராய்ச்சிகளைக் கைவிடாத கிரகாம் பெல், மெட்டல் டிடெக்டரின் கண்டுபிடிப்பிலும் ஏரோ நாட்டிக்ஸ், ஹைட்ரோபாயில்ஸ் போன்ற துறைகளிலும் பெரும் பங்காற்றினார்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 27, March 2025