பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பது ஏன்? - மொட்டை அடிக்கவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Ennum Ezhuthum
0

 



நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும் . அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுள் ஒன்று பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது அல்லது பிறந்த முடி எடுப்பது.

ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலும் , இன்னும் ஒரு குடும்பங்களில் ஒரு வருடத்திற்குள்ளும் குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள்.

எதற்கு இந்த பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என பின்வருமாறு பார்க்கலாம்.

ஏன் மொட்டை போடுகிறார்கள் ?

 

பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்கு முக்கிய காரணம் குழந்தை தாயின் கருவறையில் பத்துமாதம் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே.

தாயின் கருவறையில் இருக்கும்போது ரத்தம் , சிறுநீர் போன்ற சூழ்நிலையில் இருக்கும் . குழந்தை பிறக்கும்போது இந்த கழிவுகள் வெளியே வந்துவிட்டாலும்கண்ணுக்கு தெரியாத சில கழிவுகள் குழந்தையின் தலையில் சேரும் .

 

உடலில் சேரும் இந்த கழிவுகள் தலையில் உள்ள மயிர்கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும்.

இந்த கழிவுகளை மொட்டை போடுவதன் மூலமாகத்தான் வெளியேற்ற முடியும்.

மொட்டை போடாவிட்டால் என்ன ஆகும் ?

 

மொட்டை போடாவிட்டால் அந்த கழிவுகள் அப்படியே தலையில் தங்கி அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும்.உதாரணமாக சொறி , சிரங்கு , பொடுகு போன்றவை .

உடலுக்கு தலையே பிரதானம்.தலையை சுத்தமாக வைத்து கொள்ளவிட்டால் அது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

எனவேதான் மொட்டை என்ற பெயரில் நம் முன்னோர்கள் தலையில் உள்ள கழிவுகளை அகற்ற பிறந்த குழந்தைக்கு மொட்டை போடும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.

ஒரு சில குடும்பங்களில் தங்கள் குழந்தைக்கு சிறிது கால இடைவெளியில் இரண்டாவது மொட்டை போடுவார்கள்.

இதற்கு காரணம் முதல் மொட்டை போடும்போது வெளியேறாத சில கழிவுகள் இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதால்தான்.

நம் மக்களிடம் நேரடியாக பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுங்கள் என்று அறிவியல் ரீதியாக சொன்னால் போடமாட்டார்கள்.

அதனால் தான் சாமிக்கு நேர்த்திகடன் என்ற பெயரில் மக்களிடம் இதை செய்ய சொன்னார்கள் . 

எதையும் ஆன்மிகம் கலந்த அறிவியலுடன் சொல்வதே நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)