வீட்டிலே சுவையான பரோட்டா செய்வது எப்படி?

Ennum Ezhuthum
0

 



பரோட்டா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அதை செய்யும் முறை பார்க்கும் போது நாட்கில் எச்சில் ஊரும். பரோட்டாவில் பல்வேறு வகை உண்டு கொத்து புரோட்டா,சிக்கன் பரோட்டா,முட்டை பரோட்டா,பன் பரோட்டா,சிலோன் பரோட்டா,மலபார் பரோட்டா,காயின் பரோட்டா,வீச்சு பரோட்டா என்று பல வகைகள் உண்டு. பரோட்டா எல்லோருக்கும் பிடித்தாலும் அதை செய்வது ஒரு சிலர்தான். ஏனென்றால் செய்ய மிகக் கடினமாக இருக்கும் என்றும் அதிக நேரம் எடுக்கும் என்றும் அதை வீட்டில் செய்ய யோசிப்பார்கள். ஆனால் இப்பொழுது இந்த முறையை பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாக. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு கவனமாக படித்து செய்யவும்.

 

மைதா – 2 கப்
 
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
 
உப்பு – தேவையான அளவு
 
தண்ணீர் – தேவையான அளவு
 
 
பரோட்டா செய்ய முதலில் இரண்டு கப் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதை 10 முதல் 15 நிமிடம் நன்கு இழுத்து இழுத்து பிசையவும். இப்படி செய்தால்தான் பரோட்டா soft இருக்கும்.

நன்கு பிசைந்து முடித்த பிறகு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து அதை ஒரு உருண்டையாக உருட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பின்பு அதன் மேல் ஒரு ஈரத் துணியை கொண்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி கொள்ளவும். அந்த சிறு சிறு உருண்டையின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். பின் இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்துப் பிறகு அந்த மாவை ஒரு டேபிள் மேல் அல்லது தட்டின் பின்புறத்தில் மாவை வைத்து கையால் நன்கு பரப்பிக் கொள்ளவும். அந்த மாவை எவ்வளவு லேசாக பரப்ப முடியுமோ அந்த அளவிற்கு லேசாக பரப்பவும். பார்ப்பதற்கு ஒரு பேப்பர் போல் இருக்கவும்.



பின் அதன் மேல் என்னையை தடவி ஒரு கத்தியின் மூலமாக செங்குத்தா க கோடுகள் போடவும்.

கோடுகளைப் போட்ட பின் அதே அப்படியே புரட்டி நீல வாக்கு கொண்டு வந்த அதை பாம்பு போல சுருட்டி ஒரு தட்டில் எண்ணெயை தடவி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு 15 நிமிடமாவது ஊற வைக்கவும்.

15 நிமிடம் கழித்து போராட்டங்களை கையால் அல்லது சப்பாத்தி கட்டையால் சிறிதளவு பரப்பிக் கொள்ளவும். அதே தோசை கல்லில் மிதமான சூட்டில் போட்டு வேகவைத்து எடுக்கவும். பரோட்டா ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

இப்படியே அனைத்து பரோட்டாவையும் எடுத்த பிறகு கையால் இரு பொருள் கொள்ளவும். இவ்வளவுதான் சுவையான பருப்பு ரெடி.

Post a Comment

0Comments

Post a Comment (0)