நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டேஸ்டியான சிவப்பரிசி ரொட்டி.. குழந்தைகளுக்கான அசத்தல் உணவு..!!

Ennum Ezhuthum
0

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டேஸ்டியான சிவப்பரிசி ரொட்டி.. குழந்தைகளுக்கான அசத்தல் உணவு..!!

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க சிவப்பரிசி கொண்ட உணவுகள் உதவுகிறது. மேலும் சிவப்பரிசியில் நார்ச்சத்து, புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - ஒன்று

சிவப்பரிசி - ஒரு கப்

பச்சை மிளகாய் - ஒன்று

கேரட் - ஒன்று

சீரகம் - ஒரு தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவைக்கேற்ப

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கி, கேரட்டையும் துருவிக் கொள்ளவும்.

★பின் சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்புஅரிசி மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

★ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், கருவேப்பிலை, தேங்காய் துருவல், கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாக கலந்து அதில் வெந்நீரையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ள வேண்டும்.

★பிசைந்த மாவை அரைமணி நேரம் ஈரத்துணியால் மூடி வைத்து பின் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாக தட்டி வைக்க வேண்டும்.

★இறுதியாக தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்துவைத்த ரொட்டியை போட்டு சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் பரிமாறினால் சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)