சுவையான மட்டன் சாப்ஸ்

Ennum Ezhuthum
0

 

சுவையான மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
பட்டை - 1 துண்டு
மிளகு - அரை தேக்காரண்டி

வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 7
தக்காளி - 3
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
தனியாத் தூள் - கால் டீஸ்பூன்
மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி
தயிர், புதினா, கொத்தமல்லி,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பட்டை, மிளகு, போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மட்டன் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மட்டன் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் பாத்திரத்தை மூடி கறி நன்றாக வேகும்வரை கொதிக்கவைக்கவும். பிறகு கறி வெந்த வுடன் புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் மட்டன் சாப்ஸ் ரெடி.

Post a Comment

0Comments

Post a Comment (0)