*முருங்கை
கீரையுடன் சிறிது கருப்பு எள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நீர்விட்டு
கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அருந்திட, ரத்த அழுத்தம்
சீராகும். ரத்த சோகை குணமாகும்.
*பசலைக்கீரையுடன்
சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சைமிளகாய். உப்பு சேர்த்து வேக வைத்து
அருந்த, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும், தைராய்டு நோய்
குணமாகும்.
*வல்லாரைக்கீரை, பயத்தம்பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அருந்த ஞாபகசக்தி அதிகமாவதுடன் தோல் நோய்கள் குணமாகும்.
*முடக்கத்தான்
கீரை, சின்ன வெங்காயம், சுக்குப்பொடி சீரகத்தூள், உப்பு சேர்த்து
நீர்விட்டு கொதிக்கவிட்டு, பின் வடிகட்டி அருந்த முதுகுத்தண்டுவலி வாதநோய்,
பக்கவாதம் முதலிய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
*முள்ளங்கிக் கீரையை அப்படியே வேக வைத்து சூப்பாகவோ, சாறாகவோ அருந்த சிறுநீரகக் கற்கள் கரையும். வாயுவை அகற்றி மலச்சிக்கலை போக்கும்.
*சிறுகீரையோடு
ஒரு பிடி பார்லி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி சேர்த்து
நீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டி வெண்ணெய் சேர்த்து
அருந்த உடல் பருமன் குறையும் . பித்த நோய்கள் அகலும்.
*பருப்புப்
கீரையுடன் ஊற வைத்த வெந்தயம் போட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு
வடிகட்டி சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்த பித்தம் தணியும்.
நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, எரிச்சல் குணமாகும்.