பாதுகாப்பான
மற்றும் அதே நேரத்தில் அதிகபட்ச ரிட்டன்களை பெற்றுத் தரக்கூடிய
திட்டங்களில் பெரும்பாலான நபர்கள் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
இந்நிலையில் குடிமக்களின் நிதி நலனை கருத்தில் கொண்டு அவர்களின்
வாழ்க்கையில் போதுமான பொருளாதார ஆதரவை வழங்கக்கூடிய வகையில் அரசால்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான சேமிப்பு திட்டத்தை பற்றி
பார்க்கலாம்.
இந்த திட்டம்
ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் வழங்கக்கூடிய ஒரு திட்டமாக அமைகிறது. இதன் மூலம்
தனி நபர்கள் ஓய்வு பெற்ற காலத்திற்குப் பிறகும் சுயமரியாதையுடன்,
தங்களுக்கான செலவுகளை தாமே கவனித்துக் கொண்டும், பொருளாதாரப் பிரச்னை
இல்லாமலும் வாழ்வதற்கு உதவுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana - APY) என்பது என்ன?
அடல் பென்ஷன் யோஜனா என்ற அரசு திட்டத்தில் உங்களது வயதிற்கு ஏற்ற முதலீடு
அனுமதிக்கப்படுகிறது. அதன்படி ரூபாய் 1,000, 2000, 3000, மற்றும் ரூபாய்
4000 வரையிலும் மற்றும் அதிகபட்சமாக ரூபாய் 5000 வரையிலான பென்ஷன் தொகையை
ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் லாபகரமான அதே நேரத்தில்
பாதுகாப்பான ரிட்டன் பெறுவதை உறுதி செய்கிறது.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய தகுதி பெறுவார்கள்?
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அந்த
சமயத்தில் சீரமைக்கப்படாத துறையை சேர்ந்த நபர்கள் இந்த திட்டத்தில் முதலீடு
செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இந்த திட்டம் அனைத்து துறையை
சேர்ந்த 18 வயது முதல் 40 வயதிலான இந்திய மக்கள் அனைவரும் முதலீடு செய்ய
வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 60
வயதிற்கு பிறகு பென்ஷன் தொகையை பெறுவார்கள்.
ரூ. 3000 பென்ஷன் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
உதாரணமாக உங்களது மனைவிக்கு 25 வயது ஆகிறது என்று வைத்துக் கொள்வோம்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் APY அக்கவுண்டில் ரூபாய் 226 டெபாசிட் செய்ய
வேண்டும். உங்களது மனைவிக்கு 39 வயது ஆகிறது என்றால் நீங்கள் 792 ரூபாயை
ஒவ்வொரு மாதமும் APY அக்கவுண்டில் செலுத்த வேண்டும். உறுதியளிக்கப்பட்ட மாத
பென்ஷன் தவிர அக்கவுண்ட் ஹோல்டர் இறந்துவிடும் பட்சத்தில் நாமினிக்கு
வாழ்நாள் முழுவதும் மாத பென்ஷன் தவிர ரூபாய் 5.1 லட்சம் கூடுதலாக
வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் பென்ஷன் தொகையாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
18 வயதில் ஒரு நபர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும்பொழுது அவர் 60
வயது ஆன பிறகு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5000 பென்ஷன் தொகையாக பெறுவதற்கு
மாதா மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் (APY)?
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு விண்ணப்பதாரர் வங்கி அல்லது போஸ்ட்
ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். ஒருவர் ஒரே ஒரு அடல்
பென்ஷன் அக்கவுண்ட் மட்டுமே வைத்திருக்க முடியும். எவ்வளவு சீக்கிரமாக இந்த
திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிக பலன்களை
பெறுவீர்கள்.
வரிச் சலுகைகள் :
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டம்
80C -இன் கீழ் 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை பெறுவார்கள். இந்த
திட்டத்தில் முதலீடு செய்த நபர் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக
இறந்துவிட்டால் அவரது குடும்பம் தொடர்ந்து பலன்களை பெற்று வருவார்கள்.
இந்த திட்டம் ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் வழங்கக்கூடிய ஒரு திட்டமாக அமைகிறது. இதன் மூலம் தனி நபர்கள் ஓய்வு பெற்ற காலத்திற்குப் பிறகும் சுயமரியாதையுடன், தங்களுக்கான செலவுகளை தாமே கவனித்துக் கொண்டும், பொருளாதாரப் பிரச்னை இல்லாமலும் வாழ்வதற்கு உதவுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana - APY) என்பது என்ன?
அடல் பென்ஷன் யோஜனா என்ற அரசு திட்டத்தில் உங்களது வயதிற்கு ஏற்ற முதலீடு அனுமதிக்கப்படுகிறது. அதன்படி ரூபாய் 1,000, 2000, 3000, மற்றும் ரூபாய் 4000 வரையிலும் மற்றும் அதிகபட்சமாக ரூபாய் 5000 வரையிலான பென்ஷன் தொகையை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் லாபகரமான அதே நேரத்தில் பாதுகாப்பான ரிட்டன் பெறுவதை உறுதி செய்கிறது.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய தகுதி பெறுவார்கள்?
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அந்த சமயத்தில் சீரமைக்கப்படாத துறையை சேர்ந்த நபர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இந்த திட்டம் அனைத்து துறையை சேர்ந்த 18 வயது முதல் 40 வயதிலான இந்திய மக்கள் அனைவரும் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 60 வயதிற்கு பிறகு பென்ஷன் தொகையை பெறுவார்கள்.
ரூ. 3000 பென்ஷன் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
உதாரணமாக உங்களது மனைவிக்கு 25 வயது ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் APY அக்கவுண்டில் ரூபாய் 226 டெபாசிட் செய்ய வேண்டும். உங்களது மனைவிக்கு 39 வயது ஆகிறது என்றால் நீங்கள் 792 ரூபாயை ஒவ்வொரு மாதமும் APY அக்கவுண்டில் செலுத்த வேண்டும். உறுதியளிக்கப்பட்ட மாத பென்ஷன் தவிர அக்கவுண்ட் ஹோல்டர் இறந்துவிடும் பட்சத்தில் நாமினிக்கு வாழ்நாள் முழுவதும் மாத பென்ஷன் தவிர ரூபாய் 5.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் பென்ஷன் தொகையாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
18 வயதில் ஒரு நபர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும்பொழுது அவர் 60 வயது ஆன பிறகு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5000 பென்ஷன் தொகையாக பெறுவதற்கு மாதா மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் (APY)?
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு விண்ணப்பதாரர் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். ஒருவர் ஒரே ஒரு அடல் பென்ஷன் அக்கவுண்ட் மட்டுமே வைத்திருக்க முடியும். எவ்வளவு சீக்கிரமாக இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிக பலன்களை பெறுவீர்கள்.
வரிச் சலுகைகள் :
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டம் 80C -இன் கீழ் 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை பெறுவார்கள். இந்த திட்டத்தில் முதலீடு செய்த நபர் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இறந்துவிட்டால் அவரது குடும்பம் தொடர்ந்து பலன்களை பெற்று வருவார்கள்.