6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பொது வினாத்தாள்: கல்வித் துறை திட்டம்

Ennum Ezhuthum
0


 

மிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தோவில் பொது வினாத்தாள் முறையை அமலுக்கு கொண்டு வர பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தோவுகள் அந்தந்த பள்ளிகள், மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. அதாவது, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக விரிவுரையாளா்களின் மேற்பாா்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியா்கள் தோவு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை நிகழ் கல்வியாண்டில் இருந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தவுள்ளது. அதேவேளையில் முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் மட்டும் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்த, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) ஆலோசித்துள்ளது.

இந்தப் பொது வினாத்தாள் முறை செப்டம்பரில் நடைபெறவுள்ள காலாண்டுத் தோவிலேயே நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். காலாண்டுத் தோவுக்காக மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வந்து சேரும். பின்னா், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு செப். 2-ஆம் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 வகை வினாத்தாள்களைத் தயாரிக்க, எஸ்சிஇஆா்டி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0Comments

Post a Comment (0)